Aug 1, 2009

பங்குச்சந்தையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது எல்.ஐ.சி

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்ட வேண்டி உள்ளதால் இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் பங்குச்சந்தைகளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பங்குச்சந்தைகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டதாகவும் இந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.