Showing posts with label நிறுவனம். Show all posts
Showing posts with label நிறுவனம். Show all posts
Jun 19, 2010
ரூ.99ல் பிராட்பேண்ட் சேவை வழங்குகிறது பிஎஸ்என்எல்
இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களில், இணையதள சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, கிராமப்புற மக்களுக்கு பிராட்பேண்ட் வசதியை ரூ.99க்கு வழங்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. கிராம மக்களுக்கு இணையதள அறிவை பெருக்கும் பணியில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, பிபிஜி ரூரல் யுஎஸ்ஓஎப் 99 திட்டத்தில் 2 எம்பிபிஎஸ் திறனுடைய இன்டர்நெட் இணைப்பும், இலவசமாக 400எம்பி வரை பயன்படுத்தத்தக்க வசதியும் இதில் உண்டு. பிபிஜி ரூரல் யுஎஸ்ஓஎப் 150 திட்டத்தில் 2 எம்பிபிஎஸ் திறனுடைய இன்டர்நெட் இணைப்பும், இலவசமாக 1 ஜிபி வரை பயன்படுத்தத்தக்க வசதியும் இதில் உண்டு
Aug 9, 2009
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன கணக்குகள் மாயம்: சிஏஜி திணறல்
கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செலவழித்த கணக்குகள் மாயமாகியுள்ளன. இதனால் இதைத் தணிக்கை செய்யும் பணியை மேற்கொண்டுள்ள இந்திய தலைமை கணக்குத் தணிக்கை (சிஏஜி) அதிகாரி திணறி வருகின்றார்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணிக்கு ரூ. 45 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இத் தொகை மிக அதிகம். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அனில் அம்பானி வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்யுமாறு சிஏஜி-யை அரசு கேட்டுக் கொண்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு செலவிட்ட தொகைக்கான கணக்கு விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் தணிக்கை பணிகள் குறித்த முழு விவரத்தை வெளியிட முடியவில்லை என்று தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எண்ணெய், எரிவாயு உற்பத்தி மற்றும் அதை பகிர்ந்து கொள்வது தொடர்பான கொள்கை மட்டுமின்றி மேலும் இந்நிறுவனம் மேற்கொண்ட 6 ஒப்பந்தங்கள் குறித்தும் தணிக்கை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தபடி அது செலவிட்ட தொகை ரூ. 45 ஆயிரம் கோடி. இதுகுறித்து 3 தணிக்கை குழுக்கள் மேற்கொண்டது. இதில் ஒன்றை ஹைட்ரோ கார்பன்கள் இயக்ககம் மேற்கொண்டதாக அதன் இயக்குநர் வி.கே. சிபல் தெரிவித்தார். மற்ற தணிக்கைகளும் அரசு பரிந்துரைத்த தணிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
செலவுத் தொகையை உயர்த்திச் சொல்வதில் உரிமையாளருக்கு எவ்வித பயனும் கிடையாது. இதனால் அரசுக்கோ அல்லது ஒப்பந்ததாரருக்கோ பயனில்லை. எந்த ஒரு நிறுவனமும் தனது முதலீட்டை அதிகமாக கூறுவது கிடையாது. வருவாய் தராத மூலதனத்தில் முதலீடு செய்வது நிறுவனத்தின் லாபத்தை பாதிக்கும். எனவே இதுபோன்ற குற்றச் சாட்டுகள் சரியானவை அல்ல என்று குறிப்பிட்டார் சிபல்.
இந்தப் பிரச்னைக்குத்தீர்வு காணும் முயற்சியில் சிஏஜி ஈடுபட்டுள்ளது. இதன்படி இரண்டு ஆண்டுகள் கணக்கைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை தணிக்கை செய்ய முடிவு செய்துள்ளதாக தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Aug 1, 2009
பங்குச்சந்தையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது எல்.ஐ.சி
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்ட வேண்டி உள்ளதால் இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் சார்பில் பங்குச்சந்தைகளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பங்குச்சந்தைகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டதாகவும் இந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 30, 2009
சத்யம் தப்பிப் பிழைக்குமா?

ஒரு பொருளாதார பிரச்சினையாக மட்டுமே முதலில் கருதப் பட்ட சத்யம் விவகாரம் இப்போது அரசியல் பூச்சு பெற்று வருகின்ற நிலையில் சுமார் ஐம்பதாயிரம் ஊழியர்கள் (?) மற்றும் எண்ணற்ற சிறு முதலீட்டாளர்களின் வாழ்வாதாரமாக கருதப் படும் சத்யம் நிறுவனம் தப்பிப் பிழைக்குமா என்பது பற்றி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஒரு அலசல்.
முதலில் அரசியல் ரீதியான அலசல்
இந்த பிரச்சினை அரசியல் வடிவம் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் சத்யம் (முன்னாள்) தலைவரின் கட்சி வேறுபாடற்ற அரசியல் தொடர்புகள். மென்பொருள் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப் பட்டவர் ராமலிங்க ராஜு. மென்பொருள் வளர்ச்சி என்ற பெயரில் அரசிடமிருந்து பல சலூகைகளை (மென்பொருள் தொழிலுக்கென நிலம் பெற்று அதை இவரது மகன்களின் நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததாக கூட குற்றச் சாட்டு உண்டு) இவரால் பெற முடிந்தது. 2003 இல் வரி தணிக்கையின் போது ராம லிங்க ராஜு சார்பாக பல பினாமி கணக்குகள் இருந்ததாக இந்திய குடியரசு கட்சியைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செபி கடிதம் அனுப்பியதாகக் கூறப் படுகிறது. அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க சந்திர பாபு நாயுடு அவர்களுடன் இருந்த தொடர்பு மற்றும் நாயுடுவுக்கு அப்போதைய பா.ஜ.க. அரசில் இருந்த செல்வாக்கு உதவியதாக கூறப் படுகிறது
சந்திர பாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்த ராம லிங்க ராஜு 2004 இல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் வியந்து கொண்டிருந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடுவிடம் மென் பொருள் எனும் தலையைக் காட்டிக் கொண்டிருந்த ராமலிங்க ராஜு, ராஜசேகர ரெட்டி அவர்களிடம் காட்டியது அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் எனும் வாலை. ராஜசேகர ரெட்டி ஆட்சி பொறுப்பு ஏற்பட்ட பின்னர் வழங்கப் பட்ட பொதுத்துறை அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஏறக்குறைய அனைத்து ஒப்பந்தங்களும் ராமலிங்க ராஜுவின் மகனால் நடத்தப் பெறும் மைடாஸ் நிறுவனத்திற்கே வழங்கப் பட்டது என்றும் அந்த ஒப்பந்தங்களின் அளவு சுமார் 19,000 கோடிகள் என்றும் கூறப்படுகிறது. ஹைதராபாத் மெட்ரோ பணிகள் மைடாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி மெட்ரோ தலைவர் இந்த ஒப்பந்தம் ஒரு ஊழல் என்றும் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் கண் துடைப்பே என்றும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே ரியல் எஸ்டேட் லாபங்கள்தான் என்றும் கடந்த செப்டம்பர் மாதமே கூறியது கவனிக்கத் தக்கது.
ராஜுவின் அரசியல் தொடர்புகள் முக்கியமாக முதல்வருடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆந்திர மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் காரணத்தினாலும் ஆந்திர பிரதேச சட்ட சபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதாலும் சத்யம் முன்னாள் தலைவரை மட்டுமல்ல சத்யம் நிறுவனத்தையும் காப்பாற்றுவது ஆளுங்கட்சியின் அவசரத் தேவையாகிறது. இந்த விவகாரத்தை ஏற்கனவே கையில் எடுத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, ராமலிங்க ராஜுவுக்கும் ஆந்திர முதல்வருக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி ஆந்திர மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. மேலும் சென்ற தேர்தலில் மத்திய அரசு அமைக்க காங்கிரஸ்சுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆந்திராவின் வாக்குகளை இழக்க விரும்பாத காங்கிரஸ் அரசு அந்த மாநிலத்தின் பெருமையாகக் கருதப் படும் சத்யம் நிறுவனம் முழுகிப் போவதையும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 50,000 பேர் (?) வேலை இழப்பதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் கூறப் படுகிறது. இதன் அடிப்படையிலேயே சத்யம் நிறுவனத்திற்கு தேவையான நிதி உதவிகள் செய்து தர தயாராக இருப்பதாக மத்திய வணிகத் துறை அமைச்சர் முதலில் கூறினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலும், செபி கையில் ராஜுவை மாட்ட விடாமல் தடுப்பதற்கே அவர் அவசர அவசரமாக நீதிபதி முன் ஆஜர் செய்யப் பட்டார் என்றும் பின்னர் செபி விசாரிப்பதற்கு பல சட்டரீதியான தடங்கல்களை ஆந்திர அரசு செய்வதாகவும் பலரால் கருதப் படுகிறது. எனவே, சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சியை (மற்ற நிறுவனங்களுடன் இணைந்து போவதின் மூலம் சத்யம் சுயமிழந்து போவதை) எந்த காரணத்தைக் கொண்டும் விரும்பாத மத்திய மாநில அரசுகள், புதிய சத்யம் தலைமைக்கு போதுமான உதவிகள் செய்யும் என்று முதலில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்காக கணக்கு வழக்கில் திருத்தங்கள் என்ற "கணக்கு வழக்கு மோசடி" மட்டும் ராஜு செய்தார் என்று அனைவரும் முதலில் நம்பியிருந்த நிலை மாறி நிறுவனத்தின் பணத்தை பல வகையிலும் (சொந்த கணக்குக்கு திருப்பியது, போலி வங்கி வைப்பு தொகை, போலியான ஊழியர் எண்ணிக்கை என) மிகப் பெரிய அளவில் மோசடி செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளிவரவே, காங்கிரஸ் மத்திய தலைமை, இப்போது சத்யத்திற்கு நேரடியாக உதவி செய்ய தயங்குகிறது. ஆனால், சத்யத்தை விட பெரிய மய்டாஸ் விவகாரத்தினால் தனது அரசியல் எதிர்காலமே ஒரு கேள்விக் குறியாகி விட்ட நிலையில் ஆந்திர முதல்வர் சத்யத்தை உயிர்ப்பிக்க தீவிரமாக இருப்பதாக சொல்லப் படுகிறது.
மொத்தத்தில், சத்யத்தை தக்க முதலுதவி செய்து இதுவரை உயிர் பிழைக்க செய்திருப்பது "பழைய நிர்வாக குழுவை அடியோடு நீக்கி வணிக உலகில் சிறந்த பெயர் பெற்ற தீபக் பரேக் உள்ளிட்ட புதிய நிர்வாக குழு அமைத்திருக்கும்" மத்திய அரசின் நடவடிக்கைதான் என்பதை மறுக்க முடியாது.
இப்போது பொருளாதார ரீதியான அலசல்
இப்போது சத்யம் நிறுவனத்தின் தலைமை குழுவில் மத்திய அரசால் நியமிக்கப் பட்டிருக்கும் திரு. தீபக் பரேக், தொழில் முறையில் திறம்பட செயல் பட்டுக் கொண்டிருக்கும் HDFC நிறுவனத்தின் தலைவருமாவார். இவருடன் தலைமைக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்றவர்களும் கூட நிறுவனத்திற்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்த மிகவும் உதவிகரமாக உள்ளனர்.
நிதித் தட்டுப்பாடு
இப்போது நிறுவனத்தின் உடனடி பிரச்சினை என்னவென்றால்,ரொக்க கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதால் அன்றாட செலவினங்களுக்கும் சம்பள பட்டுவாடாவுக்கும் நிதித் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. மோசடிகள் நடைபெற்ற நிறுவனம் என்பதால் வங்கிகள் கடன் தர தயங்குகிறார்கள். மேற்சொன்ன அரசியல் காரணங்களால், அரசினாலும் நேரடியாக கடன் வசதிகளை செய்து தர முடிய வில்லை. நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழு பூர்வாங்க விசாரணையில், சத்யம் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் தொகை பாக்கி உள்ளது என்றும் சத்யம் நிறுவனத்தில் அசையா சொத்துகளின் மீது இதுவரை எந்த ஒரு வங்கிக் கடனும் பெறப் படவில்லை எனவும் அறியப் பட்டிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடி தேவைகளை சமாளிக்க நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மீது வங்கிகளிடம் கடன் கோரலாம் என்று புதிய நிர்வாக குழு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.
தலைமை இல்லாத நிலை
நிறுவனத்தின் மற்றொரு மிகப் பெரிய பிரச்சினை, இந்த நிறுவனத்தின் மீது ஊழல் கறை
படிந்திருப்பதால் தலைமை நிர்வாகி பொறுப்பேற்க யாரும் முன்வராதது. அதே சமயம், இந்த நிறுவனத்தை கையகப் படுத்த முடியுமா என்று இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான லார்சன் டுப்ரோ தீவிரமான சிந்தனையில் இருப்பதாக தெரிகிறது. சத்யம் தலைமைக் குழுவிடம் சில திட்ட விவரங்களை முன்வைத்ததாகவும் தெரிகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்க இன்னும் காலம் பிடிக்கும் என்றும் சொல்லப் படுகிறது. இடையில் இந்த நிறுவனம், சத்யத்தில் தனது பங்கினை நான்கு சதவீதத்திலிருந்து பன்னிரண்டு சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. தலைமை குழுவில் தனது பிரதிநிதியை அமர்த்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனமும் சிறந்த வணிக நியதிகளை கடைப் பிடிப்பதாகவும் அறியப் படும், லார்சன் டுப்ரோ நிறுவனம் சத்யத்தின் நிர்வாகத்தை ஏற்கும் எனில் சத்யம் நிறுவனத்திற்கு நம்பகத் தன்மை கிடைக்க உதவி புரியும். மேலும் சில நிறுவனங்கள் (டெக் மகிந்திரா, ஐ.கேட் போன்றவை) கூட சத்யத்தை கையகப் படுத்த முயலுவதாகவும் வணிக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
வாடிக்கையாளர்கள் பின்வாங்கும் அபாயம்
தற்போது சத்யம் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் இருவர் இந்த நிறுவனத்தின் தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்ட நிலையில் மேலும் பலர் இவ்வாறே செய்வார்களோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. அதே சமயத்தில் மென்பொருள் சேவைகளை சட்டென்று துண்டிப்பது மிகவும் கடினம் எனவே பல வாடிக்கையாளர்கள் சத்யம் சேவையை தொடர்வார்கள் என்றும் துறை விற்பன்னர்களால் கருதப் படுகிறது. ஏற்கனவே சொன்ன படி தீபக் பரேக், லார்சன் டுப்ரோ ஆகியோர் நிறுவனத்தின் நம்பகத் தன்மையை வளர்க்க உதவுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
சட்டரீதியான சிக்கல்
இந்திய சட்ட காவலர்களிடம் இருந்து சத்யம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் தப்பித்தாலும், அமெரிக்க சந்தைகளில் இதன் பங்கு வர்த்தகமாகி வருவதால், அங்குள்ள கண்காணிப்பாளர்கள் இந்நிறுவனத்திற்கும் ராஜுவிற்கும் கடும் நெருக்கடி கொடுக்கலாம் என்றும் இதில் இருந்து தப்பித்து அமெரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது இந்த நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப் படுகிறது. (சரிவர கண்காணிக்கத் தவறிய இந்திய செபி மீது கூட அமெரிக்க அரசு வழக்கு தொடரலாம் என்று கூட வதந்திகள் உள்ளன)
ஆக மொத்தத்தில் சத்யம் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்றாலும் இதைப் பிழைக்க வைக்க ஐ.சி.யு வில், லார்சென் டுப்ரோ மற்றும் தீபக் பரேக் எனும் திறமை மிக்க டாக்டர்களின் நேரடி கவனிப்பில், சத்யம் நிறுவனம் இருப்பதால் அது தப்பிப் பிழைக்கும் என்று ஓரளவு நம்பிக்கையோடு இருக்கலாம்.
பின்குறிப்பு: சத்யம் நிறுவனத்தின் தொடர்பாக லார்சென் மற்றும் தீபக் பரேக் எடுத்து வரும் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வருபவர்கள், மிக்க துணிச்சல் இருந்தால் இந்த நிறுவனத்தின் பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முடிவில் மிகுந்த சந்தை அபாயம் உள்ளது. முழுமையாக பணம் இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் முதலீடு செய்த பணம் முழுமையாக போனாலும் பரவாயில்லை என்று கருதும் அளவிற்கு மட்டுமே பணம்
Dec 27, 2008
"சத்தியமா" இது பகல் கொள்ளைத்தானுங்க!
கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை என்பார்கள். அது கூட ஓரளவுக்கு பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்திய பொது நிறுவனம் ஒன்றில் கிட்டத்தட்ட 8000 கோடி ருபாய் முதலீட்டாளர்களின் பணத்தை எடுத்து தனது தனிப்பட்ட லாபத்திற்கு தாரை வார்க்க முயற்சி நடந்திருக்கிறது.sathyam கம்ப்யூட்டர் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஓன்றுஆகும். இந்த நிறுவனம் தனது பங்குகள் சந்தைகளில் வர்த்தகம் ஆகி வரும் ஒரு பொது நிறுவனம் (பப்ளிக் லிமிடெட் கம்பெனி) ஆகும். இதை நிறுவியவர் திரு. ராமலிங்க ராஜு ஆவார். ஆனால் இந்த நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகளில் பெரும்பகுதியை சந்தைகளில் ஏற்கனவே அவரால் விற்பனை செய்யப் பட்டு விட்டன. அவருடைய தற்போதைய பங்கு வெறும் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான் என செய்திகள் கூறுகின்றன.
இவருடைய மகன்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் மய்டாஸ் இன்பிரா மற்றும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் . இவற்றில் முதல் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் வர்த்தகமாகி வரும் ஒரு பொது நிறுவனம். இரண்டாவது நிறுவனம் 100 சதவீதம் அதன் நிறுவனத்திற்கே சொந்தமான ஒரு தனி நிறுவனம் (பிரைவேட் லிமிடெட் கம்பெனி).
மேற்சொன்ன நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கிடையே தந்தை-மகன்கள் உறவு இருந்தாலும், நிறுவனங்களிடையே நிறுவன ரீதியான உறவு முன்னரே இருக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நேற்று, திடீரென சத்யம் நிறுவனம் மய்டாஸ் இன்பிரா நிறுவனத்தில் 51 சதவீத பங்கும் மய்டாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் 100 சதவீத பங்கும் தனது நிறுவன கணக்கில் இருந்து முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது.
மொத்தம் 8000 கோடி முதலீட்டு தொகையில் சுமார் 1500 கோடி முதல் நிறுவனத்திலும் சுமார் 6500 கோடி இரண்டாவது நிறுவனத்திலும் முதலீடுகள் செய்யப் படும் என்றும் அறிவித்தது. சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜுவின் பங்கு வெறும் 8.5 சதவீதம் மட்டுமே என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இவ்வளவு குறைவான பங்கு உரிமையை கொண்ட ஒரு தலைமை நிர்வாகி, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் (மென்பொருள் துறைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத) நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, பொது முதலீட்டாளர்களுக்கு உரிமையான ஒரு நிறுவனத்தின் பணத்தை எப்படி தாரை வார்க்க முடியும் என்ற கேள்வி நிதிச் சந்தைகளில் எழுந்துள்ளது.
சத்யம் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப் பட்ட இந்த முடிவு முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியது. நேற்று இரவு எடுக்கப் பட்ட இந்த முடிவின் எதிர்வினை, உடனடியாக அமெரிக்கா சந்தைகளில் வெளிப்பட்டது . அங்கு சத்யம் நிறுவனத்தின் பங்கின் விலை ஒரே நாளில் சுமார் 54 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மேலும் இந்திய முதலீட்டாளர்களும் தங்கள் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தினர். இதனை புரிந்து கொண்ட சத்யம் நிறுவனத்தின் நிர்வாகம் தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இன்று காலை அறிவித்தது. ஆனால், நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதால், இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
இந்த நிகழ்வு இந்திய வணிகத் துறையில் முதலாவதோ அல்லது முடிவானதோ அல்ல. மேலும் பல நிறுவனங்களிலும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன என்பது கவலைக்குரிய ஒரு விஷயம். இந்திய வணிக நிறுவனங்களை நிறுவியவர்கள் (Promoters) அவற்றின் பங்குகளை பொது மக்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் விற்ற பின்னும், அவற்றை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க சொந்த நிறுவனங்களைப் போலவே நிர்வகித்து வருவதையே அதிகம் பார்க்க முடிகிறது. பல முடிவுகள் வெளிப்படையானவையாக இருப்பதில்லை. அவற்றிற்கு பங்குதாரர்கள் ஒப்புதலும் முறையாக பெறப் படுவதில்லை. தொழிற் நிறுவனங்களை வழி நடத்துவதற்கான வகுக்கப் பட்ட நெறி முறைகள் (Corporate Governance) பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சட்டத்தின் பிடிகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்றே அதிகம் கவனிக்கப் படுகிறது. இது மிகவும் கவலை தரக் கூடிய விஷயம் ஆகும்.
இன்றைக்கு இந்தியாவின் கடைக் கோடி குடிமகனும் பங்குகளில் முதலீடு செய்ய முன்வரும் சூழ்நிலையில் அரசு கண்காணிப்பு ஆணையங்கள் மக்களின் பணத்தை கையாட நடக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும். இல்லாவிடில் அமெரிக்காவில் தற்போது ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி போன்ற நிலை இந்தியாவிலும் உருவாகி விட வாய்ப்பு உள்ளது.
Courtesy: http://sandhainilavaram.blogspot.com/
Subscribe to:
Posts (Atom)
